நெல்லை அருகே மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி

நெல்லை சுத்தமல்லி அருகே மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

நெல்லை:

நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (தொழிலாளி). இவரது மகன் முருகன் (வயது 18).

இவர் நெல்லையில் உள்ள கண் மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கான ஒரு வருட டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கண்மருத்துவமனையில் உள்ள பெண் உள்ளிட்ட 3 பேர் தன்னை தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com