பெற்றோர் சண்டையால் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி

பெற்றோருக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு பள்ளிக்கு சென்றார்.வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.
பெற்றோர் சண்டையால் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி
Published on

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த கோவிந்தப்பன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி. தேவிசெட்டிகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியின் பெற்றோர் சண்டை போட்டுள்ளனர்.

இதுபோன்று அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு பள்ளிக்கு சென்றார்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைவரும் அந்த மாணவியை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com