காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி- போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷம்
விஷம்
Published on

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் ஓசூரில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி விடுமுறைக்காக புதுக்கோட்டை கிராமத்திற்கு வந்து செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஜீவானந்தம் (வயது21) என்பவர் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். சிறுமியை பலமுறை காதல் செய்வதாக கூறி ஜீவானந்தம் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஜீவானந்தத்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியை காதல் செய்வதாக கூறி தொந்தரவு செய்த டிரைவர் ஜீவானந்தத்தை போக்சோ தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com