அங்கக பண்ணைகளில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று - இயக்குனர் திடீர் ஆய்வு

அங்ககப் பண்ணைகளில் உபயோகப்படுத்தப்படும் பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழக்காடி போன்ற தயாரிப்புகளையும் இயக்குனர் பார்வையிட்டார்.
இயக்குனர் திடீர் ஆய்வு
இயக்குனர் திடீர் ஆய்வு
Published on

திருவள்ளுர்:

திருவள்ளுர் மாவட்டம், நல்ல சந்தை உழவர் உற்பத்தியாளர் குழுவால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் கீரை பண்ணையினையும், தண்ணீர்குளம் பகுதியில் அமைந்துள்ள குமார் என்பவரின் கொய்யா அங்ககப் பண்ணையினையும் கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் சுப்பையா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இப்பண்ணைகளில் அங்கக முறையில் விளைவிக்கப்படும் கீரைகள் மற்றும் கொய்யா பழங்களை, ஆய்வு செய்தார். மேலும்  அங்ககப் பண்ணைகளில் உபயோகப்படுத்தப்படும்  பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழக்காடி போன்ற தயாரிப்புகளையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது சென்னை, விதை ஆய்வு துணை இயக்குநர் ரவீந்திரா, திருவள்ளுர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நா.ஜீவராணி, திருவள்ளுர் அங்ககச்சான்று ஆய்வாளர் அபிலாஷா மற்றும் நல்ல சந்தை உழவர் உற்பத்தியாளர் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com