கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி காவலாளி பலி

கூடுவாஞ்சேரியில் மகன் கண் முன்பு தந்தை தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மரணம்
மரணம்
Published on

வண்டலூர்:

கூடுவாஞ்சேரி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 36). இவரது 7 வயது மகன் அஜிஸ்.

நேற்று மாலை லாரன்ஸ் தனது மகனுடன் அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். லாரன்ஸ் மட்டும் குளத்தில் இறங்கி குளித்துகொண்டு இருந்தார். அவரது மகன் அஜிஸ் கரையில் இருந்தார்.

இந்த நிலையில் குளித்தில் ஆழமான பகுதிக்கு சென்ற லாரன்ஸ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் அஜிஸ் அலறியடித்து வீட்டில் இருந்த தாய்க்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு குளத்தில் மூழ்கிய லாரன்சை தேடினர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அளித்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து லாரன்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். மகன் கண் முன்பு தந்தை தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com