வருகிற 5-ந்தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர் அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் வருகிற 5-ந்தேதி மலர் அஞ்சலி செலுத்த உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சசிகலா
சசிகலா
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜெயலலிதா தமிழக மக்களின் உரிமைக்காகவும், ஏழை-எளிய மக்களின் துயர் துடைக்கவும் தம் வாழ் நாளெல்லாம் பாடுபட்டவர். உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைக் கொண்டு, தன்னலமின்றி பொதுநலத்தோடு “மக்களால் நான் மகளுக்காகவே நான்” என்று தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி, நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த புனித நிகழ்வில் தொண்டர்களும், அனைத்து பிரிவு நிர்வாகிகளும், ஜெயலலிதா தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கப் பெண்களும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, கட்சிப்பாகுபாடு இல்லாமல் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஓர் அணியில் நின்று, ஒற்றுமையாக இணைந்து அனைவரும் முக கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com