சங்கரன்கோவில் அருகே ஏ.டி.எம். மையத்தில் ரூ.11 லட்சம் மோசடி- ஊழியர் கைது

ஏ.டி.எம்.மில் பணம் வைக்கும் ஊழியர் சந்தன மாரியப்பன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே ஏ.டி.எம். மையத்தில் ரூ.11 லட்சம் மோசடி- ஊழியர் கைது
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், பாம்புகோவில் சந்தை, முள்ளிக்குளம், விருதுநகர் மாவட்டம் முறம்பு, மீனாட்சி புரம் ஆகிய பகுதிகளில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த ஏ.டி.எம்.மில் பணம் வைக்கும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சந்தன மாரியப்பன்(வயது 30) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த வங்கியின் மேலாளர் ஜெய பிரகாஷ் கணக்குகளை ஆய்வு செய்தபோது சுமார் ரூ.11 லட்சம் அதில் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்ததில் ஏ.டி.எம்.மில் பணம் வைக்கும் ஊழியர் சந்தன மாரியப்பன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெய பிரகாஷ் கரிவலம்வ ந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com