சாம்பவர் வடகரை அருகே கோழிப்பண்ணையில் விபசாரம்-உரிமையாளர் கைது

வள்ளியூர் அருகே கும்பிளம்பாடு வேம்படி தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் ஒரு பெண் இருந்தார். கோழிப்பண்ணை உரிமையாளரான செல்லப்பா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சாம்பவர் வடகரை அருகே கோழிப்பண்ணையில் விபசாரம்-உரிமையாளர் கைது
Published on

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரை சுபேதார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 66). இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அப்பகுதியில் உள்ளது. கடந்த 6 மாத காலமாக பல்வேறு காரணங்களால் கோழிப்பண்ணையை அவர் நடத்தவில்லை.

இந்நிலையில் கோழிப்பண்ணை கட்டிடத்தில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக சாம்பவர் வடகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அங்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கும்பிளம்பாடு வேம்படி தெருவை சேர்ந்த செந்தில்குமார்(32) என்பவருடன் ஒரு பெண் இருந்தார். உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளரான செல்லப்பா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com