திருவள்ளூரில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் மாயம்- போலீசில் புகார்

திருவள்ளூரில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் மாயமானது தொடர்பாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார்
புகார்
Published on

திருவள்ளூர்:

வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதை தனியார் ஏஜென்சி ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக ரூ.95 லட்சத்துடன் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் ரவிச்சந்திரன், மோகன்குமார் ஆகியோர் வாகனத்தில் சென்றனர்.

அவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பிய பின்னர் இருப்பு பணத்தை சரிபார்த்த போது அதில் ரூ.5 லட்சம் மாயமாகி இருந்தது. அந்த பணம் எப்படி மாயமானது என்று தெரியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ரவிச்சந்திரன், மோகன் குமார் ஆகியோர் தங்களது நிறுவன மேலாளரிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்கள் ரவிச்சந்திரன், மோகன் குமார் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com