மதுரவாயலில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 5 லட்சம் வழிப்பறி

மதுரவாயலில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 5 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

சென்னை:

சென்னை வானகரம் வரசத்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்.  27 வயது வாலிபரான இவர் மதுரவாயல் தனியார் ஸ்டீல் கம்பெனியில் கடந்த 7 வருடமாக பணியாற்றி வருகிறார்.

உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நிறுவனத்தின் பணத்தை வசூல் செய்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். மதுரவாயல் ஒனமாநகர் பகுதியில் வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தினேசை மடக்கி மிரட்டினர்.

பின்னர் கத்தி முனையில் ரூ 5 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர். இது பற்றி  மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com