நிதி நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி: கணவன்-மனைவி கைது

நிதி நிறுவனத்தில் 30 கோடி மோசடி செய்தது தொடர்பாக கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் லாரன்ஸ். இவரது மகன் ஆண்டோ ஸ்டாலின் நடத்திய நிதி நிறுவனத்தில் ரூ.30 கோடி வரை பணம் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கடந்த டிசம்பர் மாதம் ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி பிரேமா சுதாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். சுதாகர் இலங்கை தமிழர் ஆவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com