ஓடும் ரெயிலில் நகை வியாபாரியிடம் ரூ.12 லட்சம்-5 கிலோ வெள்ளி கொள்ளை

சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.கொள்ளை தொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஓடும் ரெயிலில் நகை வியாபாரியிடம் ரூ.12 லட்சம்-5 கிலோ வெள்ளி கொள்ளை
Published on

சென்னை:

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 44 வயதான இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தொழில் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டு ரெயிலில் சென்னை திரும்பினார்.

தனது பையில் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து வந்தார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளியை காணாமல் திடுக்கிட்டார். இது தொடர்பாக ரெயில்வே போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.

இதனை பயன்படுத்தியே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com