திருவள்ளூரில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
திருவள்ளூரில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). ரவுடி. இவரை கடந்த 11-ந் தேதி மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தார்.

பின்னர் தினேசை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ரவுடி தினேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை சூப்பிரண்டிடம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com