தே.மு.தி.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த ரவுடி கைது

மர்ம வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான். அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ரவுடியை கைது செய்தனர்.
தே.மு.தி.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த ரவுடி கைது
Published on

சென்னை :

அசோக் நகர், அடுத்த புதூர் 14-வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ரூபாவதி. தே.மு.தி.க சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி விக்கி என்கிற விக்னேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com