கே.கே.நகரில் ரேசன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

கடையில் இருந்த சர்க்கரை மற்றும் 20 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.கொள்ளை குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கே.கே.நகரில் ரேசன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
Published on

போரூர்:

சென்னை கே.கே நகர் 4-வது செக்டார் 14-வது தெருவில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரேசன் கடை ஊழியர் முனியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் விரைந்து வந்து பார்த்தபோது கடையில் இருந்த சர்க்கரை மற்றும் 20 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com