விழுப்புரத்தில் ரேசன் கடை விற்பனையாளர் மாயம்

விழுப்புரத்தில் ரேசன் கடை விற்பனையாளர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே தோகைப்பாடியைச் சேர்ந்தவர் ஜெயபாலன். (வயது61) ஓய்வு பெற்ற ரேஷன் கடை விற்பனையாளர். இவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் டீ குடிக்க சென்றார்.

அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஜெயபாலனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் ஜெயபாலன் கிடைக்கவில்லை.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயபாலன் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com