இலங்கை சிறையிலுள்ள 16 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
16 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

ராமேசுவரம்:

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை காலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 12 பேரையும், மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் சேர்த்து 16 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து அவர்கள் சென்ற 2 படகுகள் சிறை பிடித்தது.

இதனை கண்டித்து ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் கடந்த வியாழக் கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். மேலும் மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர் சங்க தலைவர் சேசு ராஜா தலைமை வகித்தார். அனைத்து மீனவ சங்கத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சிறையிலுள்ள 16 மீனவர்களையும் சிறைபிடிக்கப்பட்ட 2 படகுகளை விடுவிக்கக்கோரி கோ‌ஷ மிட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட் டத்தில் மகளிர் மீனவர் கூட்டமைப்பு மற்றும் 16 மீனவர்களின் குடும்பத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com