புட்லூரில் விளையாடிய போது விபரீதம்- கழுத்தில் சேலை இறுக்கி 4-ம் வகுப்பு மாணவன் மரணம்

சிகிச்சை பலனின்றி தமிழ்மாறன் பரிதாபமாக இறந்து போனான்.செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
புட்லூரில் விளையாடிய போது விபரீதம்- கழுத்தில் சேலை இறுக்கி 4-ம் வகுப்பு மாணவன் மரணம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புட்லூர் பி.வி.ஆர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன்.எலக்ட்ரீசியன். இவரது மகன் தமிழ் மாறன்(வயது8). காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்றுமாலை வீட்டில் இருந்த தமிழ்மாறன் தனது தாயின் சேலையை ஊஞ்சல்போல் கட்டி விளையாடினான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனது கழுத்தில் சேலை சுற்று இறுக்கியது. இதில் தமிழ்மாறன் மயங்கினான்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த பெற்றோர் அவனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்மாறன் பரிதாபமாக இறந்து போனான்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com