திருப்பூரில் மசாஜ் சென்டரில் விபசாரம்: 5 இளம்பெண்கள் மீட்பு- உரிமையாளர் கைது

இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் மசாஜ் சென்டரில் விபசாரம்: 5 இளம்பெண்கள் மீட்பு- உரிமையாளர் கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே ஜனார்த்தனன் (வயது 25) என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். அங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த மசாஜ் சென்டரை கண்காணித்து வந்தனர். இதில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் ஜனார்த்தனனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 5 இளம்பெண்களை போலீசார் மீட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com