மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

மன்னார்குடி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானை அடுத்த பெருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 42). இவர் குடும்பத்துடன் மன்னார்குடி புதிய பைபாஸ் சாலையில் வசித்து வந்தார். இவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். 

நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து மதுக்கூரில் இருந்து மன்னார்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உள்ளிக்கோட்டை பிரிவு சாலை அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பக்கிரிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com