ஈரோட்டில் தனியார் பஸ் மோதி என்ஜினீயர் பலி

ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.விபத்து தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் தனியார் பஸ் மோதி என்ஜினீயர் பலி
Published on

ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன் மகன் பிரசாந்த் (வயது 28). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்த பிரசாந்த் வேலை நிமர்த்தமாக இன்று காலை ஈரோட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது கருங்கல்பாளையம் அடுத்துள்ள கிருஷ்ணம்பாளையம் சின்னப்பா லே அவுட் அருகே ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் பிராசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com