புழல் ஜெயிலில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று கைதி திடீர் தற்கொலை

நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நாகராஜை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புழல் ஜெயிலில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று கைதி திடீர் தற்கொலை
Published on

செங்குன்றம்:

கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்து இருந்தனர். அவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

ஜெயிலில் இருந்த போது நாகராஜிக்கு உடலில் சொறி, சிரங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com