வடசென்னை அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில்1-வது நிலையின் 2-வது அலகில் உள்ள கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதேபோல் 3-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com