திருமங்கலத்தில் பள்ளி வாட்ஸ்அப் குருப்பில் ஆபாச படம் - ஆசிரியரிடம் விசாரணை

திருமங்கலத்தில் பள்ளி வாட்ஸ்அப் குருப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம் குறித்து ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்
Published on

அண்ணாநகர்:

சென்னை திருமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மதிவாணன். இவர் மாணவர்களுக்கு பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அவர் பள்ளி வாட்ஸ் அப் குரூப்பில் நேற்று ஆபாச வீடியோவை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி போன பள்ளி நிர்வாகம் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com