ஓசியில் பிரியாணி கொடுக்காததால் ஓட்டலை சூறையாடிய கும்பல்- உரிமையாளர் மீது தாக்குதல்

பொன்னேரியில் ஓசியில் பிரியாணி கொடுக்காததால் ஓட்டலை சூறையாடி விட்டு உரிமையாளரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரியாணி
பிரியாணி
Published on

பொன்னேரி:

பொன்னேரி கிருஷ்ணசாமி முதலி தெருவை சேர்ந்தவர் பிரவின்குமார். இவர் பொன்னேரி அடுத்த மெதுர்கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று ஓட்டலில் பிரவின் குமாரின் தந்தை சொக்கையா இருந்தார். அப்போது சின்னக்காவனம் காலனி பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஓட்டலுக்கு வந்தனர். அவர்கள் ஓட்டல் ஊழியர்களிடம் ஓசியில் பிரியாணி கேட்டனர். இதனை சொக்கையா கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் ஓட்டலை சூறையாடி சொக்கையாவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ஓட்டலில் இருந்த மேஜை, நாற்காலிகள் நொறுங்கின. இது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com