வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது

பள்ளிபாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் ராஜசேகரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலும் செய்து வருகிறார். அப்போது ஆற்றில் வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பது வழக்கம்.

இந்த நிலையில் அவர் வீட்டில் தோட்டா பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 68 டெட்டனேட்டர்கள், 44 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் திரி உள்ளிட்ட வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜசேகர் மீன் பிடிக்க மட்டும் தோட்டாக்களை பயன்படுத்தினாரா? அல்லது வேறு ஏதும் சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் பதுக்கி வைத்திருந்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com