‘ஸ்பா’ சென்டரில் சோதனை- மசாஜ் அழகிகள் 4 பேர் சிக்கினர்

அனுமதி இல்லாத ஸ்பா சென்டர்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.
பெண்
பெண்
Published on

சென்னை:

சென்னையில் உள்ள சில ஸ்பா சென்டர்கள் சட்டவிரோதமாக நடைபெறுவதாக புகார் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி மசாஜ் அழகிகளை பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புரசைவாக்கத்தில் உள்ள ஸ்பா சென்டர் ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மசாஜ் அழகிகள் 4 பேர் இருந்தனர். பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்த 32 வயதான மசாஜ் அழகி பிடிபட்டார். இவர் கால் பாதங்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார்.

திருவான்மியூரைச் சேர்ந்த 38 வயது அழகி உடல் முழுக்க மசாஜ் செய்பவர். அவரும் போலீசில் பிடிபட்டார்.

இதே போன்று ஓட்டேரியைச் சேர்ந்த 32 வயது பெண்ணும், 31 வயது பெண்ணும் பிடிபட்டனர். இவர்கள் மசாஜ் அழகிகள்தான். இவர்கள் 4 பேரையும் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக ஒருவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. துணை கமி‌ஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் நடத்திய இந்த சோதனையின்போது கொடுங்கையூர் காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் என்ற வாலிபரும் பிடிபட்டார். இவர் வாடிக்கையாளராக அங்கு சென்றுள்ளார்.

ஸ்பா சென்டரில் மசாஜ் செய்வது தொடர்பாக செல்போன்கள் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வாலிபர்களுக்கு வலை விரிக்கப்பட்டு வருகிறது.

இதை பார்த்து இளைஞர்கள் பலர் சென்னையில் உள்ள மசாஜ் மையங்களுக்கு படையெடுத்து பணத்தை இழந்து வருகிறார்கள். இதை தொடர்ந்துதான் அனுமதி இல்லாத ஸ்பா சென்டர்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com