சென்னை ஐ.சி.எப்.பில் போலீஸ்காரருக்கு கத்திக்குத்து- மற்றொரு போலீஸ்காரர் ஆத்திரம்

சென்னை ஐ.சி.எப்.பில் முன்விரோதம் காரணமாக போலீஸ்காரரை கத்தியால் குத்திய மற்றொரு போலீஸ்காரரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அம்பத்தூர்:

சென்னை ஐ.சி.எப். ரெயில்வே கேரேஜ் ஒர்க்‌ஷாப்பில் பாதுகாப்பு பணியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஜெயப்பிரகாஷ் (வயது46). ஆரோக்கியசாமி ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

அங்கு பணியாளர்களை போலீஸ்காரர் ஆரோக்கியசாமி ஒருமையில் பேசி வந்தார். இதை ஜெயப்பிரகாஷ் கண்டித்தார். இதனால் அவர்களிடையே முன் விரோதம் இருந்தது. நேற்று இரவு ஜெயப்பிரகாஷ் பணியில் இருந்தார். அப்போது ஆரோக்கியசாமி குடிபோதையில் வந்து அவரிடம் தகராறு செய்தார். திடீரென்று ஆத்திரம் அடைந்த ஆரோக்கியசாமி கத்தியால் ஜெயப்பிரகாசை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆரோக்கியசாமி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com