பணத்தகராறில் தொழிலாளி மீது தாக்குதல்

பணத்தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பணத்தகராறில் தொழிலாளி மீது தாக்குதல்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் அசோன் செரீப். சமையல் வேலை செய்து வருகிறார். இவரிடம் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த மகமுதா என்பவர் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com