விருதுநகரில் ஆர்.எஸ்.எஸ். வாகன பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார்- 42 பேரை கைது செய்தனர்

பேரணிக்கு போலீசார் அனுமதி இல்லை என்று தெரிவித்ததால் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் நடை பயணம் சென்றனர்.
விருதுநகரில் வாகன பேரணியை போலீசார் தடுத்து நிறுத்திய போது எடுத்த படம்
விருதுநகரில் வாகன பேரணியை போலீசார் தடுத்து நிறுத்திய போது எடுத்த படம்
Published on

விருதுநகர்:

இந்தியாவின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் வாகன பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விருதுநகர் முதல் சாத்தூர் வரை இன்று வாகன பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 9 மணியளவில் காமராஜ் வித்யா சாலையில் இருந்து வாகன பேரணி தொடங்கியது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி இல்லை என்று தெரிவித்ததால் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் நடை பயணம் சென்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக பேரணியை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சிவசாமி தொடங்கி வைத்தார். கோட்ட தலைவர் சிவலிங்கம், பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், சிறுபான்மை பிரிவு சாதிக் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் பங்கேற்ற 42 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com