ஆவடியில் பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தை சேதப்படுத்திய மர்மநபர்கள்- போலீசில் புகார்

ஆவடி மாநகராட்சி 34-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை சேதப்படுத்தியது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புகார்
புகார்
Published on

சென்னை:

ஆவடி மாநகராட்சி 34-வது வார்டில் பா.ஜனதா சார்பில் கிரிஜா சுடர்மணி என்பவர் போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் பணிமனை அமைத்துள்ளனர்.

இந்த பணிமனையின் இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல் நேற்று இரவு பிரசாரத்தை முடித்து விட்டு நிர்வாகிகள் சென்று விட்டனர்.

அதன்பிறகு யாரோ மர்ம ஆசாமிகள் பணிமனையில் வைத்திருந்த பேனர்களை கத்தியால் அறுத்து முற்றிலுமாக தேசப்படுத்தி உள்ளனர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர். இது தொடர்பாக ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வார்டில் சுடர்மணி 2 முறை சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். ஒரு முறை 40 ஓட்டு வித்தியாசத்திலும், இன்னொரு முறை 86 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com