பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ரூ.15 லட்சம் இழப்பு- சார்பதிவாளர் மீது வழக்கு

பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ரூ.15 லட்சம் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக சார்பதிவாளர் மீது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வழக்கு
வழக்கு
Published on

தேனி:

தேனி மாவட்டம் போடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக 2016 அக்.20ம் தேதி ஒரு நாள் மட்டும் அழகுமலை பணிபுரிந்தார். அந்த ஒரே நாளில் தமிழ்நாடு ஊரக, நகர்புற சீரமைப்புத்துறை 2017 வழிகாட்டுதல் வரையறை அனுமதி பெறாத 14 இடங்களை பத்திர பதிவு செய்தார். பதிவுக்கு முன் அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்யவில்லை. ஆவணங்களை பார்வையிடவில்லை.

போடி நகராட்சிக்கு வீட்டடிமனை ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60ம், வளர்ச்சி கட்டணமாக ரூ.250ம், ஆய்வுக்கான கட்டணமாக ரூ.500 என தலா ஒவ்வொரு இடத்திற்கும் வழங்க வேண்டும். ஆனால், 14 இடங்களுக்கு ஒழுங்குமுறை சீரமைப்பு கட்டணம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 980, வளர்ச்சி கட்டணம் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்து 750, ஆய்வுக்கட்டணம் ரூ.7 ஆயிரம், பதிவு கட்டணம் ரூ. 5 லட்சத்து 75 ஆயிரத்து 904 என அரசுக்கு சேர வேண்டிய ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து 634 வசூலிக்கவில்லை.

இதையடுத்து அழகுமலை மீது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com