கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 1794 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார்.

காவல் உதவி எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் பொது இடங்களில் மது அருந்திய 48 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காவல்துறையின் அறிவுரையை பின்பற்றாத 1794 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொது இடங்களில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com