களக்காட்டில் கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
களக்காட்டில் கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் களக்காடு அருகே உள்ள மூங்கிலடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மாணவி களக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து சுரேசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்து நிற்கும் படி கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்துள்ளார்.

இதையடுத்து சுரேஷ் நீ வெளியே வராவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த மாணவி உறவினர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

பின்னர் சுரேஷ் மாணவியை மூங்கிலடி வயல் காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை களக்காட்டில் விட்டு, விட்டு சென்று விட்டார்.

இதுபற்றி மாணவி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com