திண்டுக்கல் அருகே காதலை கண்டித்ததால் மாணவி தற்கொலை முயற்சி

உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்கொலை முயற்சி குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே காதலை கண்டித்ததால் மாணவி தற்கொலை முயற்சி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கே.புதுக்கோட்டை மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

அதேபள்ளியில் படித்த சக்திவேல் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சக்திவேல் பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது கவரிங் கடையில் வேலைபார்த்து வருகிறார். வாரவிடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது அவர்களது புகைப்படங்களை சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இதைபார்த்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளை கண்டித்துள்ளனர். மேலும் இனிமேல் சக்திவேலுடன் பழகக்கூடாது என்றும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பிரேக் ஆயிலை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com