எழும்பூர் மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

வழக்கம்போல் பணிக்கு வந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
எழும்பூர் மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை
Published on

சென்னை:

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனர் ராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வழக்கம்போல் பணிக்கு வந்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com