திருவேற்காட்டில் மகாவீர் ஜெயந்தியில் திறந்த இறைச்சி கடைகளுக்கு அபராதம்

திருவேற்காட்டில் மகாவீர் ஜெயந்தி அன்று திறந்த இறைச்சி கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.
அபராதம்
அபராதம்
Published on

பூந்தமல்லி:

மகாவீர் ஜெயந்தியையொட்டி மதுபானக்கடைகள், இறைச்சிக்கடைகளை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்கடைகளை திறந்து விற்பனை செய்வதற்கு நேற்று ஒருநாள் மட்டும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இதனை மீறி இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் தடையை மீறி சில இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் இதன் அடிப்படையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்த போது இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com