பட்டாபிராமில் அரசு பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து ரகளை- 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்

பட்டாபிராமில் அரசு பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து ரகளை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
பஸ் கண்ணாடி உடைப்பு
Published on

ஆவடி:

ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி அரசு பஸ்(எண் 572) சென்று கொண்டு இருந்தது. டிரைவர் தனசேகரன் பஸ்சை ஓட்டினார். பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரியில் பஸ்சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ்சை வழிமறித்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் அரிவாளால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். மேலும் டிரைவரையும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டனர்.  இதில் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com