மயிலத்தில் பங்குனி உத்திர திருவிழா- முருகன் கோவிலில் தேர் அலங்கரிக்கும் பணி மும்முரம்

மயிலத்தில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 17-ந் தேதி காலை நடைபெறுகிறது.
தேர் அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் பணியாளர்கள்
தேர் அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் பணியாளர்கள்
Published on

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகிற 17-ந் தேதி காலை 5.45 மணிக்கு நடக்க உள்ளது.

விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள விநாயகர், முருகன் தேர்களை சுத்தம் செய்து தேர் சக்கர அச்சுகளை சரி செய்து வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் தேர்களின் மீது மேடை அமைத்து நீண்ட கம்பங்களை கொண்டு கோபுரம் அமைக்கும் பணியிலும், கோவில் பணியாளர்கள் மும்முரமாக செய்து வருகின்றனர். இப்பணியை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com