பணகுடி வாலிபர் வீட்டில் மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின- இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு

இசக்கிமுத்து மீது போலீசார் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வழக்கு
வழக்கு
Published on

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் இசக்கிமுத்து(வயது 34).

நேற்று காலையில் அவர் வீட்டில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் அவரது இடது கையில் 3 விரல்கள் துண்டானது. வலது கை சிதைந்தது.

தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

இசக்கி முத்து அப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளை வேட்டையாடுயாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் வேட்டைக்கு பயன்படுத்துவதற்காக நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது என்பது தெரியவந்தது. உடனே நெல்லையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை பத்திரமாக கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.

இதுதொடர்பாக இசக்கிமுத்து மீது போலீசார், சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com