பள்ளிபாளையம் அருகே 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது

பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளிபாளையம் அருகே 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது
Published on

பள்ளிப்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 65) பெயிண்டர். இவர், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினார்.

இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com