வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒருமாதம் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதலாவது அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அனல்மின் நிலையம்
அனல்மின் நிலையம்
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது.

இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் மொத்தம் 630 மெகா வாட் மின் உற்பத்தியும் இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகா வாட் என மொத்தம் நாள் ஒன்றுக்கு 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 1-வது நிலையின் 1-வது அலகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அந்த அலகில் ஒரு மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.

இதனால் அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com