வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி ஒரு மாதம் நிறுத்தம்

வட சென்னை அனல் மின் நிலைய 1-வது நிலையில் உள்ள 3-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 30 நாட்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
அனல்மின் நிலையம்
அனல்மின் நிலையம்
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது.

இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் வட சென்னை அனல் மின் நிலைய 1-வது நிலையில் உள்ள 3-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 30 நாட்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் அந்த அலகில் உற்பத்தி செய்யப்படும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும் இரு நிலைகளில் 1,620 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com