வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

இரண்டாவது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் சேர்ந்து மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
வடசென்னை அனல் மின்நிலையம்
வடசென்னை அனல் மின்நிலையம்
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் சேர்ந்து மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 1-வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் குழாய் கசிவை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com