வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது.அனல் மின் நிலையத்தின் 2- வது நிலையில் உள்ள 1-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட் என மொத்தம் தினமும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் 2- வது நிலையில் உள்ள 1-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com