பழனியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் வீட்டில் இன்று சோதனை நடைபெற்றது.ராஜா முகமது வீட்டுக்கு இன்று காலை உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நெய்க்காரப்பட்டியில் சோதனை நடைபெற்ற வீடு.
நெய்க்காரப்பட்டியில் சோதனை நடைபெற்ற வீடு.
Published on

பழனி:

நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com