காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே கானூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (வயது32). அவரது மனைவி மஞ்சு (21). இவர்கள் கடந்த மாதம் 23-ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று இரவு 2 பேரும் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பெரியசாமிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டது. அதோடு நெஞ்சுவலியும் இருந்தது.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக பெரியசாமியை தூக்கிகொண்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பெரியசாமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கச்சராபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com