முள்ளக்காடு அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்- 6 பேர் உயிர் தப்பினர்

முள்ளக்காடு அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிசை வீட்டில் தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.
குடிசை வீட்டில் தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே நேசமணி நகரை சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). பால்துரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவர்களுக்கு ஆனந்தி (28) என்ற மாற்றுத்திறனாளி மகள் உள்பட 2 மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவர்கள்கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு 9 மணி அளவில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தங்களது குடிசை வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வீட்டின் கூரையில் தீப்பிடித்தது. உடனே அனைவரும் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து ஸ்பிக் தொழிற்சாலை மற்றும் தெரமல்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தாலும், குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்டது.

இந்த விபத்தில் ரூ.70 ஆயிரம் பணம், தங்க நகை, சான்றிதழ்கள், ரேசன்கார்டு, ஆதார் கார்டு, வீட்டு பத்திரம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் மின்கசிவா? அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தையொட்டி அப்பகுதியில் வைக்கப்பட்ட பட்டாசால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com