போலீசாரை தாக்கி மோட்டார் சைக்கிள் திருடர்கள் தப்பி ஓட்டம்- ஒருவர் கைது

நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் பதுங்கி இருந்த போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்பு உடைய 2 பேரை மடக்கிப்பிடித்து தங்களது வாகனத்தில் ஏற்றினர்.
கைது
கைது
Published on

சென்னை:

நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை கைப்பற்றி நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வெங்கடேசன் என்பவரிடம் போலீசார் விசாரித்தபோது மோட்டார் சைக்கிளை மதுரவாயல் பகுதியில் இருந்து திருடி வந்ததாக தெரிவித்தார்.

இதுபற்றி மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோபால், போலீஸ்காரர்கள் துக்கையப்பன், ஹரிதாஸ் ஆகியோர் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க வாகனத்தில் வந்தனர்.

நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் பதுங்கி இருந்த போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்பு உடைய 2 பேரை மடக்கிப்பிடித்து தங்களது வாகனத்தில் ஏற்றினர். அப்போது எதிர்ப்பு தெரிவித்து மோட்டார் சைக்கிள் திருடர்கள் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் கோபால், போலீஸ்காரர்கள் துக்கையப்பன், ஹரிதாஸ் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் பிடிபட்டவரில் ஒருவன் தனது கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினான். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குள் குற்றவாளிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபால் உள்பட 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

தப்பி ஓடியவர்களில் ஒருவன் ராகுல் என்பது தெரியவந்தது. அவன் மீது திருட்டு, வழிப்பறி உள்பட 23 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவனுடன் தப்பி ஓட்டம் பிடித்த கூட் டாளியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com