நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள வண்டாம்பாளை மேலவெளியை சேர்ந்தவர் பெரியார் (வயது 70). இவரது மனைவி சாரதாம்பா.

கடந்த 14-ந்தேதி வண்டாம்பாளை மெயின் ரோட்டை பெரியார் கடந்தபோது அசன் உசேன் மகன் யாசர் (24), என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த நன்னிலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com